மழைக்கால கூட்ட தொடர் இறுதி வாரம் – எதிர் கட்சி தலைவர்கள் ஆலோசனை!

Opposition parties have stated they will not run in the by-elections this week.

கடைசி வாரநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பேச வேண்டியவை குறித்து இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 13-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் உள்ளிட்ட சில பிரச்சினைகளை மையப்படுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மழைக்கால கூட்டத்தொடர் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மீதமுள்ள ஐந்து நாட்களில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று காலை ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளனர்.