பிரதமர் மோடி – மதிப்பில்லா மகன்.? சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் தலைவர் கார்கேவின் மகன்.!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மகன் பிரியங்க் கார்கே மீது கர்நாடக பாஜகவினர்  தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Priyank Kharge

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மகன் பிரியங்க் கார்கே மீது கர்நாடக பாஜகவினர்  தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கி விட்ட காரணத்தால், பிரதான கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அப்போது மற்ற கட்சித் தலைவர்களை பற்றி விமர்சித்து பேசுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடி குறித்து விஷப்பாம்பு என விமர்சித்து, பின்னர் தான் அப்படி கூறவில்லை என விளக்கம் அளித்தார்.

அதே போல கார்கே மகன் பிரியங்க் கார்கேவும் பிரச்சார பேச்சால் சிக்கியுள்ளார்.அதாவது, கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது , பிரதமர் மோடி குறித்து மதிப்பில்லாத மகன் (நாலயக் பீட்டா) என விமர்சித்து இருந்தார்.

பிரியங்க் கார்கேவின் இந்த விமர்சனத்தை அடுத்து , பெங்களூருவில், தேர்தல் ஆணையத்தில் கர்நாடக பாஜகவினர் பிரியங்க் கார்கே மீது புகார் அளித்துள்ளனர். பிரதமர் மோடி குறித்து அவதூறாக விமர்சித்துள்ளார். அது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளனர்.