#Breaking : மீண்டும் அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைப்பு.! உச்சநீதிமன்றம் உத்தரவு.!

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு மீதான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஜனவரி 10ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு மீதான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஜனவரி 10ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை பதிவு செய்தனர்.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று முன் தினம் தொடங்கியது. இன்று வரை தொடர்ந்து 3வது நாளாக நடைபெற்று வந்தது. இன்று வரை ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்தது.

அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் பதிவு செய்யப்பட உள்ளதை அடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 10ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் பதிவு செய்யப்பட உள்ளது.