ஆளுநர் கூறிய கருத்தை திரும்பப்பெற வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

மாநில நலனுக்கு எதிராக ஆளுநர் பேசிவருவது அவருக்கு அழகல்ல, சொன்ன கருத்தை திரும்பப்பெறுவது தான் அவரின் பதவிக்கு மதிப்பாகும் என முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மாநில நலனுக்கு எதிராக ஆளுநர் பேசிவருவது அவருக்கு அழகல்ல, சொன்ன கருத்தை திரும்பப்பெறுவது தான் அவரின் பதவிக்கு மதிப்பாகும் என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ரவி பேச்சு:சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், குடிமைப்பணி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுடன், தமிழக ஆளுநர் ரவி இன்று கலந்துரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் ஸ்டெர்லைட் போராட்டம் மக்களை தூண்டிவிட்டு நடத்தப்பட்டது எனவும், நாட்டின் தேவையை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டி விட்டு மூடிவிட்டனர் எனவும் கூறினார்.

கண்டனம்:மேலும் ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் கிடப்பில் இருப்பதை சுட்டிக்காட்டி கூறிய ஆளுநர், அவை நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று கூறினார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநருக்கு அழகல்ல:ஆளுநரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, மாநில நலனுக்கு எதிராகவும், செய்துகொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிராகவும் ஆளுநர் நடந்து கொள்வது அவருக்கு அழகல்ல, அவர் கூறிய கருத்தை திரும்பப் பெறுவது தான் முறையாகும் என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதையும் தைரியமாக ஆதரிப்பதும் அல்லது எதிர்ப்பதும் என இல்லாமல் கிடப்பில் போடுவது அரசியல் சட்டம் அங்கீகரித்த பதவியில் இருப்பவருக்கு அழகல்ல, மேலும் இதனை சட்டபூர்வமற்ற பொதுவெளியில் கூறுவதுடன், நியாயப்படுத்திட முயல்வது மோசமான முன்னுதாரணம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

unknown nodeunknown node