அரசியல் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.- மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹருல்லா பேச்சு.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக, ஆளுநர் செயல்பாடுகள் குறித்த சில பதங்கள் நிறுத்தி வைப்பு தனிதீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.
தீர்மானம் :
இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தி தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு நிறைவேற்றினார். அதன் பிறகு முதலவர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.
வேல்முருகன் பேச்சு :
அதன் பிறகு மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீதான தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசுகையில், தமிழக அரசும், தமிழக மக்களும் ஆளுனரின் செயல்பாடுகளை கைகட்டி கொண்டு வேடிக்கை பார்ப்பவர்கள் அல்ல என கூறினார்.
ஆளுநர் பதவி விலக வேண்டும் :
மேலும், அரசியல் சட்டத்திற்கு எதிராக விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார். அவரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை தமிழக அரசு கொண்டு வேண்டும் என எம்எல்ஏ வேல்முருகன் குறிப்பிட்டார்.
ஜவஹருல்லா பேச்சு :
அடுத்து பேசிய , மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹருல்லா பேசுகையில், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆளுநர் எவ்வாறு குரூப் 1 மாணவர்கள் மத்தியில் உரையாற்றி பாடம் நடத்துகிறார் என விமர்சித்தார்.
அடுத்ததாக, தமிழ்நாட்டு மக்களால் விரும்பாத ஒருவர் (ஆர்.என்.ரவி) தமிழகத்தின் ஆளுநராக இருக்கிறார் என விமர்சித்தார். அரசியல் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் எனவும் ஜவஹருல்லா கூறினார்.