தமிழ்நாடு வரலாறு ஆளுநருக்கு தெரியவில்லை. தமிழ்நாடு என்ற பெயர் கிடைப்பதற்கு பல தலைவர்கள் உழைத்துள்ளனர். CPI மாநில செயலாளர் டிராஜா விமர்சனம்.
நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி தனது உரையில், தமிழக அரசு குறிப்பிட்டு இருந்த ஒரு சில வாக்கியங்கள், முக்கிய தலைவர்களின் பெயர்களை வாசிக்க மறுத்துவிட்டார். இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்துவிட்டார்.
இந்த நிகழ்வு குறித்து இன்று டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு வரலாறு ஆளுநருக்கு தெரியவில்லை. தமிழ்நாடு என்ற பெயர் கிடைப்பதற்கு அப்போதைய தமிழக முதல்வர் அண்ணா அவர்கள் பொறுப்பெடுத்த பின்னர், சென்னை மாகாணத்தை தமிழநாடு என மாற்றினார்.
மொழிவாரி மாநிலங்கள் உருவாக்க இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடி உள்ளன. சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என மாற்றம் செய்ய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜீவானந்தம் தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றி உள்ளார். ஆளுநருக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை. என தனது விமர்சனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் முன்வைத்தார்.