வரியை ஏற்றிய முட்டாள் தான் அதை குறைக்கணும் – தெலுங்கானா முதல்வர் காட்டம்!

The Telangana Chief Minister has said that it is not we who have imposed the VAT, it is the idiot who has imposed it.

வாட் வரியை ஏற்றிய நாங்கள் அல்ல, அதை ஏற்றிய முட்டாள் தான் குறைக்கணும் என தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மாநில அரசுகளை கேட்கக் கூடிய அதிகாரமோ, உரிமையோ மத்திய அரசுக்கு கிடையாது என தெரிவித்துள்ளார். மேலும் வாட் வரியை கூட்டியது நாங்கள் அல்ல, வரியை ஏற்றிய முட்டாள் தான் அதைக் குறைக்கவும் வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு மறுக்கிறது. எனவே இனிமேல் விவசாயிகள் நெல் நடவு செய்யாதீர்கள் என வலியுறுத்தி உள்ளேன். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து நெல்லை நடவு செய்யாதீர்கள் என்று நான் சொன்னதற்கு எதிராக பாஜக தலைவர்கள் போராட்டங்களை அறிவிக்கிறார்கள்.

ஆனால் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யும் வரை நானும் விடப்போவதில்லை என தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி முழுமையாக மத்திய அரசு நீக்க வேண்டும். அதுதான் நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் எங்களுக்கு எதிராக தவறான கருத்துக்களை பேசுவதை தெலுங்கானா பாஜக தலைவர் பந்தி சஞ்சய் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது நாக்கை அறுத்து விடுவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.