ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா.? திமுக மீது பிரதமர் மோடி விமர்சனம்.!

தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தவர் இந்திரா காந்தி. ஆனால், அதே காங்கிரஸ் கட்சியுடன் தான் தற்போது திமுக கூட்டணி வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தவர் இந்திரா காந்தி. ஆனால், அதே காங்கிரஸ் கட்சியுடன் தான் தற்போது திமுக கூட்டணி வைத்துள்ளது. மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு.

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தீர்மானமானது நேற்று மக்களவையில் நடைபெற்றது. அதேபோல் இன்று நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அவர் இன்று மிகவும் ஆவேசமாக எதிர்க்கட்சியினரை பல்வேறு கருத்துக்களை கொண்டு பேசி வருகிறார்.

unknown node

தாமரை மலரும் :அவர் கூறுகையில், எதிர்க்கட்சியினர் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலரும் எனவும், எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் தாமரை மலரும் எனவும், நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்களின் நடவடிக்கை மற்றும் உரைகள் தனக்கு ஏமாற்றம் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அடுத்து, காங்கிரஸ் கட்சியினர் எவ்வளவு தோல்விகளை கண்டாலும் தங்கள் தவறை உணரவில்லை எனவும் தனது விமர்சனத்தையும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் பிரச்சனைகளுக்கு நாங்கள் நிரந்தர தீர்வுகளை கண்டு வருகிறோம். என பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசி இருந்தார்.

unknown node

அரை சதம் அடித்த இந்திரா காந்தி :மேலும் கூறுகையில், இதுவரையில் 90 முறை காங்கிரஸ் கட்சியானது மாநில அரசுகளின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்துள்ளது. இதில் 50 முறை மாநில ஆட்சியை டிஸ்மிஸ் செய்து அரை சதம் அடித்தவர் இந்திரா காந்தி என மிகவும் காட்டமான விமர்சனத்தை முன் வைத்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தபோது, அந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்தவர் இந்திரா காந்தி. ஆனால், அதே காங்கிரஸ் கட்சியுடன் தான் தற்போது திமுக கூட்டணி வைத்துள்ளது என்றும், எம்ஜிஆர் ஆட்சியையும் காங்கிரஸ் கலைத்து உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

unknown node

ஆட்சி டிஸ்மிஸ் :அடுத்ததாக, ஆந்திராவில் முதல்வர் என்.டி.ராமராவ் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்ற சமயம், மத்தியில் இருந்த காங்கிரஸ் அவரது ஆட்சியையும் டிஸ்மிஸ் செய்தது என்றும், கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சி அமைந்த போது அந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்தவர் அப்போதைய பிரதமர் நேரு என குறிப்பிட்டு தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

unknown node

பிரதமர் மோடி பெருமிதம் :மேலும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்ததை விட பல பல மடங்கு தற்போது நல்லது நடைபெற்று வருகிறது. பழங்குடியின மக்கள், பட்டியல் இனத்தவர்கள் என அனைவருக்கும் பாஜக ஆட்சியில் நல்லது நடைபெற்று வருகிறது. என குறிப்பிட்டார். தற்போது வரை நான் மக்களுக்காகவே நிற்கிறேன். என்னை எதிர்க்க எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பாருங்கள் என்று காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை குறிப்பிட்டு பேசினார். அதற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.