திமுக அரசு விடிகின்ற அரசாக இல்லை. விடியா அரசாக இருக்கின்றது – ராஜேந்திரபாலாஜி

ஸ்டாலின் ஆட்சி வெறும் விளம்பர ஆட்சியாக உள்ளது. விளம்பரத்தால் உயர்ந்தவரின் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது என்று ராஜேந்திர பாலாஜி பேட்டி.

ஸ்டாலின் ஆட்சி வெறும் விளம்பர ஆட்சியாக உள்ளது. விளம்பரத்தால் உயர்ந்தவரின் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது என்று ராஜேந்திர பாலாஜி பேட்டி.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், அதிமுக சார்பில்,விருதுநகர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தன் குடும்பத்தை வாழ வைப்பதற்காக கருணாநிதி திமுகவைப் பயன்படுத்தினார். அவரது மகன் ஸ்டாலின் தனக்கு வாக்களித்த மக்களைப் பற்றி யோசிக்காமல், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல திட்டங்களை ரத்து செய்துள்ளார்.

திமுகதான் தொடர்ந்து ஆளும் என்ற எண்ணம் திமுகவிற்கு வந்துவிட்டது. ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும். ஸ்டாலின் ஆட்சி வெறும் விளம்பர ஆட்சியாக உள்ளது. விளம்பரத்தால் உயர்ந்தவரின் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது என்றும், . திமுக அரசு விடிகின்ற அரசாக இல்லை. விடியா அரசாக இருக்கின்றது என்றும் விமர்சித்துள்ளார்.