வாய் பேச முடியாதோர், காது கேளாதோர் இனி தேர்தலில் போட்டியிடலாம்-  தமிழக அரசு அரசாணை

வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்று  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் மாதம்

வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்று  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழு நோயாளிகள் போட்டியிட ஏதுவாக  சட்ட திருத்தம் கொண்டு வந்தது.இந்த நிலையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது,வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்று  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .மேலும் வரும் உள்ளாட்சி தேர்தல் முதல் இதனை அமல்படுத்தப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.