#Breaking:இந்தியாவில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா 3,52,991 பாதிப்பு;2,761உயிரிழப்பு

The corona, which peaked in India in a single day, affected 3,52,991; 2,761 deaths

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,52,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,52,991பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,313,163 உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை  28,13,658  ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 1,43,04,382 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 2,761 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 195,123 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு 22,933 க்கும் மேற்பட்டவர்கள் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர் 350 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 66,191 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 832 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நேற்று  வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் முறையே 15,889 மற்றும் 35,614 பேருக்கு புதியதாக தொற்று பதிவாகியுள்ளது.

#Breaking:இந்தியாவில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா 3,52,991 பாதிப்பு;2,761உயிரிழப்பு