நீட் தேர்வை எதிர்க்கும் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்..!

The consultative meeting of the parties opposing NEET has started today at the Periyar Stadium in Chennai.

நீட் தேர்வை எதிர்க்கும் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் இன்று தொடங்கியுள்ளது.

நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது.

இதனையடுத்து,நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில்,நீட் தேர்வை எதிர்க்கும் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் இன்று தொடங்கியுள்ளது.இந்த ஆலோசனைக் கூட்டத்தை திராவிடர் கழகம் ஒருங்கிணைத்துள்ளது.

மேலும்,திராவிட கழக தலைவர் வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும்இந்த கூட்டத்தில் திமுக,காங்கிரஸ்,மதிமுக,விடுதலை சிறுத்தைகள் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,மனித நேய மக்கள் கட்சி மற்றும் ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளனர்.மேலும்,மே 3 இயக்கமும் பங்கேற்றுள்ளது.

அதன்படி,திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் என்.ஆர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரிமற்றும் கோபண்ணா,இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வீரபாண்டியன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பீமராவ்,விசிக சார்பில் திருமாவளவன்,வன்னியரசு ஆகியோர்,ஐ.யூ.எம்.எல் சார்பில் காதற் மொய்தீன்,மமக சார்பில் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.