தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி.! காங்கிரஸ் கட்சி முடிவு.!

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி முடிவு செய்யுள்ளது.

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி முடிவு செய்யுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 8) தமிழகம் வருகிறார். சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதன் பின், சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார்.

கருப்பு கொடி :

பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்க நாளை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதற்கு காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளதாக தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

பிரதமர் பயணம் :

பிரதமர் மோடி நாளை எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் கருப்பு கொடி காட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல்காந்தி தகுதிநீக்க விவகாரம் உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன்வைத்து இந்த கருப்பு கொடி போராட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 அடுக்கு பாதுகாப்பு :

பிரதமர் வருகையை ஒட்டி, அவர் செல்லும் இடஙக்ளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயண விவரங்கள் தற்போதும் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.