நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் வரும் ஜூலை 12இல் மவுன சத்தியாகிரகம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, கர்நாடகாவில் மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குஜராத் சூரத் நீதிமன்றத்தின் வழக்கு தொடரப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் தனது எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தும் அந்த மனவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டு உள்ளனர். அதில், மக்களவையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வருகையில் வரும் ஜூலை 12-ம் தேதி புதன்கிழமை அன்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தலைநகரங்களிலும் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் மௌன சத்யாகிரகத்தை நடத்த உள்ளனர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை எதிர்த்து போராடியவர் ராகுல் காந்தி. எங்களுக்கு எதிராகவோ, எங்கள் தலைவர்களுக்கு எதிராகவோ பாஜக என்ன தந்திரங்களை கையாண்டாலும் உண்மையும், ஒவ்வொரு இந்தியனின் உண்மையான நலனுக்காக எங்கள் அர்ப்பணிப்பும்தொடர்ந்து இருக்கும். இது போன்ற பாசிச சக்திகளை இந்திய அனுமதிக்காது என்றும் காங்கிரஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
unknown node