"தாய் உள்ளம், தந்தையின் அக்கறையுடன் சிறப்பு திட்டங்கள் அறிவித்த முதல்வர்" – எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டு..!

"The Chief Minister who announced special projects with the care of the mother and her father" - MP Tamilachi Thangapandian ..!

இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக தாய் உள்ளத்துடன், தந்தையின் அக்கறையுடன், பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார் என்று எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாக அறிவித்திருந்தார்.

அதன்படி,தமிழக சட்ட பேரவையில் இன்று, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3,510 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என்றும்,இலங்கை தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ரூ.5 கோடியும், கல்விக்காக ரூ.1 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்தார்.

இந்நிலையில்,இலங்கைத் தமிழர்களின் நலனுக்காகதாய் உள்ளத்துடன், தந்தையின் அக்கறையுடன், பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார் என்று எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“புலம்பெயர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள, இலங்கைத் தமிழர்களின் கல்வி, உணவு, பொருளாதாரம், வாழ்வாதார மேம்பாடு என தாய் உள்ளத்துடன், தந்தையின் அக்கறையுடன், பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்ஸ்டாலின் அவர்களுக்கு எண்ணற்ற நன்றிகள்”,என்று தெரிவித்துள்ளார்.மேலும்,ஏதிலியான மக்களுக்கு, எல்லாமுமாக இருப்போம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது கழக அரசு என்றும் பதிவிட்டுள்ளார்.

unknown node