மூத்தக்குடிமக்களை செல்வமாக கொண்டாடும் நாடுதான் நன்றி மிகுந்தவர்கள் இருக்கிற தேசமாக திகழ முடியும் என டிடிவி தினகரன் ட்வீட்.
மூத்தக்குடிமக்களுக்கு ரயிலில் வழங்கப்பட்டுவந்த கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கிட வேண்டும் என டிடிவி தினகரன் அவர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மூத்தக்குடிமக்களுக்கு ரயிலில் வழங்கப்பட்டுவந்த கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கிட வேண்டும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட இந்த கட்டணச்சலுகை, இயல்பு நிலை திரும்பி மீண்டும் ரயில்கள் ஓடத்தொடங்கி மாதக்கணக்கில் ஆனபிறகும் மூத்தக்குடிமக்களுக்கு திரும்ப அளிக்கப்படாதது சரியானதல்ல.
மூத்தக்குடிமக்களை செல்வமாக கொண்டாடும் நாடுதான் நன்றி மிகுந்தவர்கள் இருக்கிற தேசமாக திகழ முடியும். முதியோர்களுக்கான கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டதால் கூடுதல் வருமான கிடைக்கிறது என்று நினைக்காமல், அவர்களுக்குரிய சலுகையை உடனடியாக வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node