#Breaking:கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அதிரடி உத்தரவு..!

The Cauvery River Management Board has directed the Karnataka government to release 33.19 TMC of water for June and July.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜூன்,ஜூலை மாதத்துக்கான 33.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு,காவிரி நீர் மேலாண்மையின் 12 வது ஆலோசனை கூட்டமானது ,காணொலி காட்சி வாயிலாக தற்போது நடைபெற்று வருகிறது.

மத்திய நீர் ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில்தமிழகம்,கர்நாடகா,புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக,தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப்சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக ஜூன்,ஜூலை மாதத்திற்கு கர்நாடக அரசு வழங்கவேண்டிய டிஎம்சி நீர் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில்,தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜூன்,ஜூலை மாதத்துக்கான 33.19 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி,ஜூலை மாதத்துக்கான 24 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறிய கருத்துக்கு காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், மேகதாது மட்டுமன்றி காவிரியின் குறுக்கே எந்த இடத்தில் அணை கட்டுவது என்றாலும் எங்கள் அனுமதி தேவை என தெரிவித்துள்ளனர்.