அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த வருடம் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராகவும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு :இந்த பொதுக்கூட்டத்துக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த வழக்கில் பொதுக்குழு செல்லும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விருப்பமில்லை என கூறிவிட்டு தீர்மானங்கள் குறித்த வழக்கை சிவில் வழக்காக தாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
உயர்நீதிமன்ற வழக்கு :இதனை அடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர் எம்எல்ஏ பி.எச்.பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஜூலை 11இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இடைக்கால தடை வழங்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது.