தமிழக சட்டப்பேரவையில் நாளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-24க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் 2023-24க்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள வேளாண்மைத்துறை அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சியமைந்த பிறகு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். இதனால் இது அவர் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும்.
இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் குறிப்பாக திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலை 10 மணிக்கு இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.