பாஜகவும்,அதிமுகவும் குற்றத்தை மூடி மறைத்து குற்றவாளியை காப்பாற்றி வந்தனர் – ஜோதிமணி எம்பி

சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டின் வீட்டு வாசலில் தவறாக நடந்து கொண்ட வழக்கில் ஏபிவிபி அமைப்பின் (ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவு) முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான

சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டின் வீட்டு வாசலில் தவறாக நடந்து கொண்ட வழக்கில் ஏபிவிபி அமைப்பின் (ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவு) முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 2022ல் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை ஆதம்பாக்கம் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய்த்துறை தலைவர் பதவியில் இருந்து சுப்பையா நீக்கம் செய்யப்பட்டார். தஞ்சை பள்ளி மாணவி விவகாரத்தில் முதலமைச்சர் வீடு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சந்தித்தாக சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

ஜோதிமணி எம். பி ட்வீட்

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் முன்னாள் தலைவர் ,சுப்பையா சண்முகம் மூதாட்டி வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து அறுவறுக்கக்தக்க வகையில் நடந்துகொண்டதற்காக கைது செய்யபட்டுள்ளார்.பாஜகவும்,அதிமுகவும் குற்றத்தை மூடி மறைத்து குற்றவாளியை காப்பாற்றி வந்தனர்.’ என பதிவிட்டுள்ளார்.