பிபிசி ஐடி ரெய்டானது மோடி அரசாங்கம் விமர்சனங்களுக்கு பயப்படுவதை காட்டுகிறது. இந்த மிரட்டல் தந்திரங்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். காங்கிரஸ் கட்சி டிவீட்.
டெல்லியில் உள்ள பிபிசி ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக உள்ளன. மேலும், பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்து சோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
unknown nodeஆவணப்படத்திற்கு தடை :முன்னதாக, பிபிசி செய்தி நிறுவனமானது, 2002 குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் ஒன்று வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்து இருந்ததையும் நாம் அறிவோம். இந்த விவகாரத்தை அடுத்து தான் மத்திய அரசு பிபிசி மீது இப்படி ஒரு ரெய்டு நடவடிக்கையை மேற்கொள்கிறது என பல்வேறு கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
unknown nodeகாங்கிரஸ் விமர்சனம் :தற்போது காங்கிரஸ் கட்சியும் இது குறித்து விமர்சனம் செய்துள்ளது. அதில், பிபிசியின் அலுவலகங்களில் நடந்த ஐடி ரெய்டு விரக்தியை தருகிறது என்றும், இந்த ரெய்டு மூலம், மோடி அரசாங்கம் விமர்சனங்களுக்கு பயப்படுவதை காட்டுகிறது என்றும், இந்த மிரட்டல் தந்திரங்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் என்றும், இந்த ஜனநாயக விரோத சர்வாதிகாரப் போக்கை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கே.சி.வேணுகோபால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதனை காங்கிரஸ் கட்சி ரீ-டிவீட் செய்துள்ளது.
unknown node