அதிமுக வழக்கு.! ஓபிஎஸ் மனு இன்று விசாரணை.! இபிஎஸ் தாக்கல் செய்த கேவியேட் மனு.!

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று விசாரணை நடைபெற உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று விசாரணை நடைபெற உள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ரத்து செய்வது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

ஓபிஎஸ் மனு தள்ளுபடி :

இந்த வழக்கு விசாரணை ஒற்றை நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு முன் நடைபெற்று இரு தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டது. அதன் பின்னர் நேற்று அதிமுக தீர்மானங்களை ரத்து செய்தாலோ , தேர்தலை தடை செய்தாலோ, சரியான தலைமை இன்றி அதிமுக கட்சிக்கு மிக பெரிய  பாதிப்பாக மாறிவிடும் என கூறி மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேல்முறையீடு :

இந்த ஒற்றை நிதிமன்ற தீர்ப்பை எதிர்த்து , அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட கூடாது என்று கூறியும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இபிஎஸ் கேவியேட் மனு :

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, ஓபிஎஸ் மேல்முறையீடு மனுவை விசாரிக்கையில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு கேவியேட் மனுவை தாக்கல் செய்துள்ளது.