மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தென்காசி பகுதியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தென்காசி மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், திமுக பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த வாக்குவாத சம்பவம் தொடர்பாக, தென்காசி மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் அவரது பதவியில் இருந்து நீக்கி திமுக பொருளாளர் அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். புதிய தென்காசி மாவட்ட செயலாளராக சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
