தமிழக வீரர்களின் பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது – முதலமைச்சர் பழனிசாமி 

Tamilnadu Chief Minister Palanisamy has congratulated the Indian team on winning the historic Test series.

வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் ,டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்துள்ளார்.இந்திய அணியில் தமிழக வீரர்கள் அஸ்வின்,நடராஜன் ,சுந்தர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.கடைசி டெஸ்டில் மட்டும் காயம் காரணமாக அஸ்வின் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node