தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து ...!

Tamil Nadu Health Secretary Radhakrishnan's car has been involved in an accident.Tamil Nadu Health Secretary Radhakrishnan's car accident...!

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஓமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் இன்று திருச்சி விமானநிலையத்திற்கு ஆய்வுக்காக சென்றுள்ளார்.

அப்பொழுது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் வந்த கார் தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.