போதை பொருள் சந்தையாக தமிழகம் மாறியுள்ளது.! வெளிநடப்பு செய்த இபிஎஸ் கண்டனம்.!

பெண் காவலரே புகார் அளித்தும் விசாரித்து தான் நடவடிக்கை எடுப்போம் என டிஜிபி சொல்கிறார். தமிழ்நாடு தற்போது போதை பொருள் சந்தையாக மாறியுள்ளது. - வெளிநடப்பு செய்த

பெண் காவலரே புகார் அளித்தும் விசாரித்து தான் நடவடிக்கை எடுப்போம் என டிஜிபி சொல்கிறார். தமிழ்நாடு தற்போது போதை பொருள் சந்தையாக மாறியுள்ளது. – வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

இன்று சட்டப்பேரவையில் சட்டப்பேரவை நிகழ்வுகளை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து சட்டப்பேரவை நிகழ்வுகளை குறிப்பிட்டார்.

அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை, திருட்டு நாள்தோறும் நடைபெறுகிறது. தமிழக அரசு இதனை பாதுகாக்க தவறிவிட்டது . அதனை சட்டப்பேரவையில் வாதிட கொண்டு வர நினைத்தோம். ஆனால் சட்டப்பேரவை தலைவர் அதற்க்கு அனுமதி அளிக்கவில்லை. என கூறினார்.

மேலும், விருகம்பாக்கம் திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட பெண் காவலர் மீது திமுக பிரமுகர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். உடனே பெண் காவலர் கண்ணீர் மல்க காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருந்தும் திமுக பிரமுகர்கள் சமாதானம் பேச முயற்சித்துள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து தான் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

மேலும், பெண் காவலரே புகார் அளித்தும் விசாரித்து தான் நடவடிக்கை எடுப்போம் என டிஜிபி சொல்கிறார். பெண் காவலர் புகார் அளித்தும் அதில் விசாரணை செய்து தான் நடவடிக்கை எடுப்போம் என கூறுவது தவறு என குறிப்பிட்டார்.

அடுத்து, தமிழ்நாடு தற்போது போதை பொருள் சந்தையாக மாறியுள்ளது. கடல் வழியாக போதை பொருள் கடத்துகிறார்கள். திட, திரவ, பவுடர் போதை பொருள், கஞ்சா, கொக்கைன் போன்ற போதைபொருட்கள் தமிழகத்தில் நடமாடி வருகிறது. பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதைப்பொருள் சரளமாக கிடைக்கிறது. இதனால் இளைஞர்கள் அதிகளவில் போதை பொருளை பயன்படுத்தி தவறான பாதைக்கு செல்கிறார்கள் என கூறினார்.

மேலும், இதனை சட்டப்பேரவை கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் சட்ட பேரவை அனுமதிக்க வில்லை. அனுமதி மறுக்கப்பட்டது. நடுநிலையோடு செயல்பட வேண்டிய  சட்டப்பேரவை தலைவர் அப்படி செயல்படவில்லை. எங்கள் கொரடா சபாநாயகரிடம் இதனை தெரிவித்து விட்டு தான் சட்டப்பேரவையில் நாங்கள் கேள்வி எழுப்பினோம். ஆளுங்கட்சியில் இருந்து சிக்னல் வந்தால் தான் எங்களை பேச சபாநாயகர் அனுமதிக்கிறார். என ஆளுங்கட்சி மீது சரமாரி குற்றசாட்டுகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.