ஆளுநர் தனது அறிக்கையில் அந்த காலத்தில் தமிழ்நாடு இல்லை என கூறுகிறார்.என்று வரலாறு தொடங்கிய காலம் முழுவதும் தமிழ்நாடு என்றுதான் தொடர்ச்சியாக இருக்கிறது. – மதுரை எம்பி சு.வெங்கடேசன்.
காசி தமிழ்ச்சங்கம் பாராட்டு விழாவில் பேசிய ஆளுநர் தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்கலாம் என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து அண்மையில் அதற்கு விளக்கம் அளித்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்த அறிக்கை குறித்து, மதுரை எம்பி சு.வெங்கடேசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ஆளுநர் மாளிகையின் அறிக்கை அண்மையில் வெளியாகி இருந்தது. அதில் கூறப்பட்ட கருத்துக்களை பார்க்கையில் தனது கருத்தை ஆளுநர் வேறு வகையில் வலியுறுத்துகிறாரோ என்றே கேள்வி எழுகிறது என குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், அந்த அறிக்கையில் ஆளுநர், அந்த காலத்தில் தமிழ்நாடு இல்லை என கூறுகிறார்.என்று வரலாறு தொடங்கிய காலம் முழுவதும் தமிழ்நாடு என்றுதான் தொடர்ச்சியாக இருக்கிறது. ஆளுநர் வேறு விதத்தில் தனது கருத்தை வலியுறுத்துகிறார். பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என குறிப்பிடுகிறார். ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான பொங்கல் அழைப்பிதழில் கூட தமிழ்நாடு என்கிற பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுரவர் ஆண்டு முறையும் அதில் கைவிடபட்டு தான் ஆளுநர் மாளிகை அழைப்பு கடிதம் எழுதியது. தவறுதலான கருத்தோட்டத்தில் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். தனது கருத்துக்களை பல கட்டங்களில் வலியுறுத்தி வருகிறார் என்றே தான் நினைப்பதாக சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
அடுத்து கூறுகையில், நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில வாரங்களுக்கு முன்னர் குடியரசு தலைவரை சந்தித்து ஆளுநர் பற்றிய புகார் மனுவை அளித்துள்ளோம் எனவும் எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்தார்.