பரபரக்கும் அரசியல் களம்.! மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் ஆளுநர் ரவி சந்திப்பு.!

மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

Union Minister Amit shah - Tamilnadu Governor RN Ravi

மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

மிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு வார கால பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களுடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று மாலை ஆளுநர் ரவி டெல்லி சென்றடைந்தார்.

இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் ஆளுநர் ரவி டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே, தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே செந்தில் பாலாஜி விவகாரத்தில் இருந்த கருத்து வேறுபாடு அமித்ஷா தலையீட்டில் தான் ஒரு சுமூக முடிவு எட்டப்பட்டது.

அதன் பிறகு கூட, அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு இசைவாணை வழங்க வேண்டும் என ஆளுநருக்கு ஒப்புதல் கோப்புகள் அனுப்பி அவர் கையெழுத்திடாமல் இருக்கிறார் என தமிழக சட்டத்துறை அமைச்சர் கடிதம் எழுத, அதற்கு ஆளுநர் மாளிகை கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு வந்து சேரவில்லை என கூறியது. ஆளுநர் பதிலுக்கு ஆளுநர் மாளிகைக்கு கோப்புகள் அனுப்பப்பட்டு, அதனை ஆளுநர் மாளிகை ஊழியர்கள் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை சீட்டுகள் வெளியிடப்பட்டன.

இப்படி தமிழகத்தில் தமிழக அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே முற்றல் மோதல் போக்கு நிலவி வரும் வேளையில் தற்போது ஆளுநர் ரவி – மத்திய அமைச்சர் அமித்ஷா சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்டுகிறது.