தமிழக அரசு தொடங்கியுள்ள காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது – முதல்வர் பசவராஜ்!

Karnataka Chief Minister Basavaraj Pomma has said that the Central government should not give permission for the Cauvery-Gundaru project started by the Tamil Nadu government.

தமிழக அரசு தொடங்கியுள்ள காவிரி-குண்டாறு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு காவிரி நீரை பங்கிட்டு காவிரி – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை தொடங்கி உள்ளது. இதன் மூலம் காவிரி நீர் பங்கிடப்பட்டு பெரிய அளவில் நீர் பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வழிவகை செய்யப்படும். இந்நிலையில், இது தொடர்பாக நேற்று திருப்பதியில் நடந்த தென் மாநிலங்களின் வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர் காவிரி – குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை எனவும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மீறி உபரி நீரை பயன்படுத்தி பெரிய அளவில் நீர் பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என தான் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு தொடங்கியுள்ள காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது – முதல்வர் பசவராஜ்!