மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர்

Tamil Nadu Chief Minister MK Stalin has inaugurated a special corona vaccine special camp for the disabled.

மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.அதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து,மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட்ட வேண்டும் என்று தமிழக அரசு கடந்த மே 16-ம் தேதி உத்தரவிட்டது.மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில்,சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எத்திராஜ் மண்டபத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.