நாளை மதியம் வரை ப. சிதம்பரத்தை கைது செய்ய தடை-உச்சநீதிமன்றம் உத்தரவு

அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்தை நாளை பகல் 12 மணி வரை கைது செய்ய  தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்தை நாளை பகல் 12 மணி வரை கைது செய்ய  தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது .ஓன்று  சிபிஐக்கு எதிராகவும்,அமலாக்கத்துறைக்கு எதிராகவும் தாக்கல் செய்யபப்பட்டது.ஆனால் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்த  நிலையில் இன்று அவர் தொடந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.முதலாவதாக சிதம்பரம் தரப்பில் சிபிஐக்கு எதிராக தாக்கல்  செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்தை நாளை பகல் 12 மணி வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.சிதம்பரத்துக்கு  இன்றோடு தடை முடியும் நிலையில் நாளை மதியம் வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.