ரூ.1000 உடனே வழங்காவிட்டால் போராட்டம் – அதிமுக தீர்மானம்....!

Struggle if Rs.1000 is not paid immediately - AIADMK resolution

சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு முதன்முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவுட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகள்,கட்சியின் வளர்ச்சி பணிகள் போன்றவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும்,குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் தாய்மார்களின் ஆதரவுடன் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.