முத்திரைத்தாள் கட்டணம் அதிரடி உயர்வு! சட்டப்பேரவையில் மசோதா.!

முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்படுவதற்கான மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்படுவதற்கான மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மசோதா:

தமிழக சட்டப்பேரவையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி பல்வேறு கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

2001க்கு பிறகு உயர்வு:

கடந்த 2001 ஆம் ஆண்டில் இந்த முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டதற்கு பின்பு, இதற்கான கட்டணம் மாற்றப்படாமல் இருப்பதால் அச்சிடும் செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் தற்போது இந்த முத்திரைத்தாள் கட்டண உயர்வுக்கான சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி உயர்வு:

தற்போது கொண்டுவரப்பட்ட மசோதாவின்படி, ரூ.20 முத்திரைத்தாள் ரூ.200 ஆகவும், ரூ.100 முத்திரைத்தாள் ரூ.1000 ஆகவும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா, பேரவையில் நிறைவேறியவுடன் உடனடியாக அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

முத்திரைத்தாள் கட்டணம் அதிரடி உயர்வு! சட்டப்பேரவையில் மசோதா.!