பெண் குழந்தைகள் பாதுகாப்பில் காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும்- ஸ்டாலின் ட்வீட்

அதிமுக ஆட்சியில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் (@CHILDLINE1098 ) தமிழ்நாடு, இந்தியாவில் 2-வது மாநிலமாகியுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சைல்டுலைன் என்ற அமைப்பு இந்தியாவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு அதிகம் ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் கேரளா முதல் இடத்தில் இருப்பதாக தெரிவித்தது.மேலும்

தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

unknown node

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், அதிமுக ஆட்சியில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில், ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினாலும், காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.