தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் வெளியிட அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் சிரமங்களை தவிர்க்கவும், பாதுகாப்பான, மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாடும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் வெளியிட அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
unknown node