#Shocking:மீண்டும் 14 ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் கொரோனா;30 ஆக அதிகரித்த பலி!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 11,793 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 14,500 ஆக அதிகரித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 11,793 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 14,500 ஆக அதிகரித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,34,33,345 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 96,700-லிருந்து 99,602 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 30 பேர் இறந்துள்ளனர், இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,077 பேர் ஆக உள்ளது.

அதைப்போல,கடந்த ஒரே நாளில் 11,574 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,28,08,666 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,97,46,57,138 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 13,44,788 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.