முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் பொறுப்பேற்பு..!

Shilpa Prabhakar Satish took over as the Chief Minister's Private Officer at the General Secretariat.

முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை செயலகத்தில்  பொறுப்பேற்றுக்கொண்டார்.

சட்டசபை தேர்தலுக்கு முன் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தொகுதிகளில் வைக்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் தீர்வு காணும் என தெரிவிக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் “உங்கள் தொகுதியில் முதல்வர்” என்ற தனித்துறை உருவாக்கப்பட்டு அதற்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார். உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது ஷில்பா பிரபாகர் சதீஷ் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதற்கிடையில், சமீபத்தில் ஷில்பா பிரபாகர் சதீஷ் முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கி தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் பொறுப்பேற்பு..!