திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே மோதல் ! பலர் காயம்.

Several persons were injured in a clash between Trinamool Congress and BJP activists at Ramnagar in West Bengal

மேற்கு வங்க மாநிலத்தில்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பாஜகவினர்  இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

பூர்பா மெடினிபூர் மாவட்டம் ராம்நகர் சாலையில் உள்ள  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகே பாஜகவினர் ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது இந்த மோதல் ஏற்பட்டதாக போலீசார்  தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதன் பின் போலீசார் அந்த பகுதியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.ஊர்வலமாக சென்றபோது திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியின் தொண்டர்கள் தங்களது, கட்சியினரை தாக்கியதாக மேற்கு வங்க பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பா.ஜ.கவினர் தங்களது கட்சி அலுவலகத்தை சேதப்படுத்தியதாகவும் ,அங்கு இருந்த கட்சியினரை அடித்ததாகவும் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.