சசிகலா உடல்நிலை சீராக உள்ளது -மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

Sasikala, who was admitted to the hospital, is in stable condition, hospital management said in a statement.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிறையில் இருந்த சசிகலாவுக்கு கடந்த 20- ஆம் தேதி நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையின் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால், சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.சசிகலா உடல்நிலை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும்,சசிகலா உடலில் ஆக்சிஜன் அளவு 97-ஆகவும் ,சர்க்கரை அளவு 178-ஆகவும் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.