இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் சசிகலா ! மருத்துவமனையில் குவிந்துள்ள அமமுகவினர்

Sasikala to be discharged from Bengaluru hospital today

மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சசிகலா இன்று  டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவிற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்தார்.இதனிடையே   சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து உள்ளதாகவும் விக்டோரியா மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்படும் சசிகலா பிப்ரவரி 3 அல்லது 5 ஆம் தேதி தமிழக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.சசிகலாஇன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதையடுத்து, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை முன்பு ஏராளமான அமமுகவினர் குவிந்துள்ளனர்.இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.