தமிழகத்திற்கு புறப்பட்ட சசிகலா ! மூன்றாவது வாகனத்தில் பயணம்

Sasikala leaves for Tamil Nadu! Travel in a third vehicle

பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா தற்போது மூன்றாவது வாகனத்திற்கு மாறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில் இன்று காலை பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு காரில் புறப்பட்டார். சசிகலா புறப்பட்ட காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. அதிமுக அமைச்சர்கள் புகார் கொடுத்ததால் சசிகலா அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என போலீஸ் தெரிவித்த நிலையிலும் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தி இருந்தது.

சசிகலா அதிமுக கொடியுடன் தமிழகம் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி துணை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்த நிலையில், தமிழக எல்லைக்கு வருவதற்கு முன் தனது காரில் இருந்த அதிமுக கொடியை அகற்றிவிட்டு அதிமுக உறுப்பினர் காரில் ஏறி தமிழக எல்லைக்கு சசிகலா வந்தார்.தற்போது அதிமுக உறுப்பினர் காரில் இருந்து பிரச்சார வாகனத்திற்கு மாறியுள்ளார் சசிகலா.

தமிழகத்திற்கு புறப்பட்ட சசிகலா ! மூன்றாவது வாகனத்தில் பயணம்