மதுரையில் RSS தலைவர் மோகன் பகவத் வருகையை முன்னிட்டு சாலைகளை சீரமைக்க, விளக்குகளை பராமரிக்க உத்தரவு.
மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மதுரையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு வருவதையொட்டி சாலைகளை சீரமைக்கமதுரைமாநகராட்சிஉதவி ஆணையாளர் உத்தரவு
மதுரை மாநகராட்சி மண்டலம்-4 சத்ய சாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள் 22.07.2021 முதல் 26.07.2021 வரை நேரில் கலந்துகொள்ள உள்ளார். எனவே அன்னாரின் வருகையை முன்னிட்டு விமான நிலையத்திலிருந்து அன்னார் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு வழித்தடங்களில் உள்ள சாலைகளில்
சாலைகளை சீரமைத்தல்,
தெரு விளக்குகளை பாரமரித்தல்,
சாலைகளை சுத்தமாக வைத்தல், போன்ற பணிகளை செய்திடவும்,
அவர் பயணிக்கும் நேரங்களில் சாலையில் மாநகராட்சி பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை கண்காணித்தல், போன்ற பணிகளை கவனித்து வர அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node