ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன் என ஜேசிடி பிரபாகர் கூறிய கருத்து குறித்து கே.பாலகிருஷ்ணன் ட்வீட்.
ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, ஓபிஎஸ் அனுமதித்தால் ரூ.41 ஆயிரம் கோடி தொடர்பான ரகசியத்தை வெளியிடுவேன் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தரப்புக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன்’ என்று அதிமுகவின் ஓ.பி.எஸ் தரப்பினரான ஜேசிடி பிரபாகரன், எடப்பாடி பழனிச்சாமியை எச்சரிக்கும் பேச்சு ஊடகங்களில் வந்துள்ளது.
அவ்வளவு பிரம்மாண்டமான தொகை யாருடையது? அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா? வருமான வரி செலுத்தப்பட்டதா? அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node