இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது

விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது. நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ்

விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது.நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 23-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.நேற்றுடன்  வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.இந்தநிலையில் இன்று  விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது.