சென்னை வாசிகளே..! மழை,வெள்ளம் தொடர்பான தகவல் தெரிவிக்க உதவி எண் இதோ...!

சாலை பராமரிப்பு பணிக்கு மண்டல வாரியாக தலா ரூ.10 என 15 மண்டலங்களுக்கு சென்னை மாநகராட்சி நிதி ஒதுக்கீடு  செய்துள்ளது.

சாலை பராமரிப்பு பணிக்கு மண்டல வாரியாக தலா ரூ.10 என 15 மண்டலங்களுக்கு சென்னை மாநகராட்சி நிதி ஒதுக்கீடு  செய்துள்ளது.

இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபாவளி வரை பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் ஏற்படும் பள்ளம், குழிகளை உடனே சரிசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலை பராமரிப்பு பணிக்கு மண்டல வாரியாக தலா ரூ.10 என 15 மண்டலங்களுக்கு சென்னை மாநகராட்சி நிதி ஒதுக்கீடு  செய்துள்ளது.

942 சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.  மேலும்,சாலைகளில் பள்ளம், குழிகள், மழைநீர் தேங்கியிருந்தால் 1913, 044-25619206 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node