நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ட்வீட்.
தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் கிளாம்பால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் நல்லாசிரியர் விருதை பெற்றுக் கொண்டார்.
இந்த விருதினை அவர் தன்னுடைய பள்ளி சீருடை சென்று பெற்றுக்கொண்டார். இது காண்போர் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் இது குறித்து மத்திய இணைய அமைச்சர் எல் முருகன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘ராமநாதபுரம் மாவட்ட கீழாம்பல் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் திரு.ராமச்சந்திரனுக்கு கொரோனா சமயத்தில் மாணவர்களின் இணையவழி கல்விக்காக சொந்த செலவில் தொலைபேசிகளை அளித்தும், கிராமத்திலுள்ள பட்டதாரிகளுக்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சியை சிறப்புடன் வழங்கியதற்காக 2022- ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்றது நம் தமிழகத்திற்கு பெருமை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரின் கல்வி சேவைகள் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.