ரஜினி-கமல் இணைவது மக்கள் பிரச்சனைக்காக அல்ல-வேறு காரணம் கூறும் திருமாவளவன்

ரஜினி-கமல் இணைவது நாட்டு மக்கள் பிரச்சனைக்காக அல்ல என்று  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்

ரஜினி-கமல் இணைவது நாட்டு மக்கள் பிரச்சனைக்காக அல்ல என்று  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவசியம் ஏற்பட்டால் நானும் ,ரஜினியும் இணைவோம் என்று தெரிவித்தார்.இவர் கூறிய சிலமணி நேரங்களிலேயே ரஜினிகாந்தும் ,நானும் கமலும் தமிழகத்தின் நலனுக்காக இணைவோம் என்று கூறினார்.இவர்கள் இருவரும் கூறியது முதலே இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இது குறித்து அரசியல் கட்சியினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

unknown node

இந்த நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் .எம்.பி.யுமான திருமாவளவன் கூறுகையில், ரஜினி-கமல் இணைவது நாட்டு மக்கள் பிரச்சனைக்காக அல்ல. தனிப்பட்ட பிரச்சனைக்காகவே.இமயமலையில் யாரோ கூறியதை ரஜினி இங்குவந்து கூறுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.