கர்நாடகா திட்டம் ராஜஸ்தானில் கை கொடுக்குமா.? காங்கிரஸ் தலைமையை சந்திக்கும் அசோக் கெலாட். மற்றும் சச்சின் பைலட்.!

டெல்லியில் காங்கிரஸ் தலைமையை இன்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் சந்திக்க உள்ளனர்.

Ashok Gehlot and Sachin Pilot

டெல்லியில் காங்கிரஸ் தலைமையை இன்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் சந்திக்க உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அசோக் கெலாட் முதல்வராக இருக்கிறார். கடந்த ஆட்சி காலத்தில் பாஜக செய்த ஊழல் பற்றி விசாரிக்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் குறிப்பிட்டு இருந்தது. இத வருட இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது வரை விசாரணை நடக்கவில்லை என தெரிகிறது.

இதனை எதிர்த்து ராஜஸ்தானில் காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இதனால் காங்கிரஸ் அங்கு இரண்டு பிரிவுகளாக இருக்கிறது . இதனை ஒன்றுபடுத்தி பலமாக்க காங்கிரஸ் தலைமை முயற்சியை மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே, இதே போல கர்நாடகாவில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாரை ஒன்றாக சேர்த்து கர்நாடக தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்தது. அதே போல தற்போது ராஜஸ்தானில் பிரிந்து இருக்கும் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகிய இருவரை ஒன்றாக சேர்க்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை  ஈடுபட்டுள்ளது.

முதற்கட்டமாக இன்று, டெல்லியில், ராஜஸ்தான் மாநில முதல்வர்அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டை தனித்தனியாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேச உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு நிகழ்ந்து, மீண்டும் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் ஒன்றிணைந்து ராஜஸ்தான் தேர்தல் களத்தில் செயல்படுகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.