ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் நியாயமற்றது – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை.!

ராகுல்காந்தி தகுதி நீக்கம் நியாயமற்றது என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராகுல்காந்தி தகுதி நீக்கம் நியாயமற்றது என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது.

2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதற்கு, அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ரா.சரத்குமார் அறிக்கை:

அந்த வகையில், இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மக்களவையில் இந்த விவாகரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு கூடி, விசாரணை நடத்தி 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருக்கலாம். ஆனால், கால அவகாசம் கொடுக்காமல் உடனடியாக தகுதி நீக்கம் செய்தது ஏன் என்று புரியவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு, நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கி விளக்கம் கோரும் போது, மக்களவை உரிய கால அவகாசம் வழங்காமல், உடனடியாக தகுதிநீக்கம் செய்தது, அவர்களின் ஜனநாயக கடமையை ஆற்றுவதை தடை செய்வதாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு:

இதற்கிடையில், ராகுல் காந்தி இன்று இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து, மதியம் 1 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அதானி குழுமத்துடனான தொடர்பைத் திசைதிருப்ப பாஜக அரசு தன்னை லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்ததாக குற்றம் சாட்டினார்.