காங்கிரஸ்கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு சென்றால் ஆர்எஸ்எஸ்-க்கு போ என ராகுல் காந்தி விமர்சனம் செய்வாராம்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வராக பதவியில் இருந்த கிரண் குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதே போல ஒரு சில காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்துள்ளனர்.
இப்படி காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தார்கள் குறித்து காங்கிரஸ் முக்கிய தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் ஒருவர் கட்சியை விட்டு விலகுவது குறித்து நான் பேசும் போதெல்லாம், “ஜானே தோ ஆர்எஸ்எஸ் மே” என்று ராகுல் காந்தி கூறுவார். ஜானே தோ ஆர்எஸ்எஸ் மே என்றால், ஆர்எஸ்எஸ்க்கு போ என்று அர்த்தம். என்றும் ஆசாத் மேலும் கூறினார்.